சுடச்சுட

  

  செங்கம் அருகே உள்ள சாமந்திபுரம் கிராமத்தில் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவியதையடுத்து, அங்கு மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
  செங்கத்தை அடுத்த பிஞ்சூர் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட சாமந்திபுரம் கிராமத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
  இந்த நிலையில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதையடுத்து, மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் அந்த கிராமத்தில் உடனடியாக முகாம் அமைத்து, மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று காய்ச்சலுக்குச் சிகிச்சையளித்தனர்.
  இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், மேல் நீர் தேக்கத்தொட்டி, குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கிராமத்தில் உள்ள குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
  இந்த நிலையில், செங்கம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி, சாமந்திபுரம் கிராமத்துக்குச் சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, விவரங்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, முழு வீச்சல் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai