சுடச்சுட

    

    கல்லூரி மாணவர்கள் 104 பேருக்கு திங்கள்கிழமை மடிக் கணினிகள் வழங்கப்பட்டன.
    செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பழநி தலைமை வகித்தார். கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மேகலா வரவேற்றார்.
    இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 104 மாணவர்களுக்கு மடிக் கணினிகளை வழங்கினார்.
    தொடர்ந்து அவர் பேசியதாவது: கிராமப்புற மாணவர்களுக்கு மடிக் கணினி என்பது எட்டாக் கனியாக இருந்தது. அதை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்களின் முன்னேற்றத்துக்கான சிறப்புத் திட்டமாகக் கொண்டு வந்தார். மாணவர்கள், அரசு வழங்கும் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்றார்.
    கூட்டுறவு ஒன்றியங்களின் மாநிலத் தலைவர் அமுதா அருணாசலம், திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட பண்டக சாலை இயக்குநர் ராஜன், மாவட்ட முன்னாள் ஊராட்சிக் குழுத் தலைவர் நைனாக்கண்ணு, மாவட்ட வணிக வரித் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மதியழகன், புருசோத்தமன், கூட்டுறவு சங்கத் தலைவர் துரை, கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai