Enable Javscript for better performance
ரூ. 1.33 கோடி மதிப்பில் 18 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 1.33 கோடி மதிப்பில் 18 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    தமிழ்நாடு அரசு நீர்ப் பாசன ஆதாரங்கள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொழுந்தம்பட்டு, மேல்கரிப்பூர், ராதாபுரம், கீழ்வணக்கம்பாடி, சொர்பநந்தல், மேல்பென்னாத்தூர், மேல்செங்கம்புதூர் உள்ளிட்ட 18 ஏரிகள் குடிமராமத்து பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    இதன்படி ஏரிகளில் படர்ந்துள்ள சிறு குறு முள்செடிகளை அகற்றுதல், ஏரியின் கரைகளை அதன் நீரியியல் விவரத்தின்படி தரப்படுத்துதல், வரத்துக் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி தண்டராம்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட கொழுந்தம்பட்டு ஏரியில் குடிமராமத்து பணிகளைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
    மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, எம்.எல்.ஏ.க்கள்  தூசி மோகன் (செய்யாறு), வி.பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம், பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளர் ஆர்.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai