சுடச்சுட

  

  வந்தவாசி, செங்கம், போளூர், ஆரணியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 14th March 2017 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் நியாயவிலைக் கடைகள் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  வந்தவாசி வட்டத்தில் மருதாடு, கீழ்க்கொடுங்காலூர், தெள்ளாறு, சு.காட்டேரி, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், தமிழக அரசைக் கண்டித்தும், நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய பொருள்களை வழங்கக் கோரியும் முழக்கமிட்டனர்.
  மாவட்ட திமுக அவைத் தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சுரேஷ்கமல், நந்தகோபால், நகரச் செயலர் அ.பாபு, தொழிலதிபர் எம்.ஸ்ரீகுகன், முன்னாள் நகரச் செயலர் லியாகத்பாஷா, மாவட்ட விவசாய அணித் துணை அமைப்பாளர் எம்.சி.சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  செங்கம் ஒன்றியத்தில் 45 இடங்களில்...: அதேபோல செங்கம் ஒன்றியத்தில் 45 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  செங்கம், தளவாநாய்க்கன்பேட்டை, மேல்ராவந்தவாடி, தண்டம்பட்டு, குப்பனத்தம், குயிலம் உள்ளிட்ட 45 நியாயவிலைக் கடைகளின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், உணவுப் பொருள்களை முறையாக வழங்ககோரி முழக்கமிட்டனர்.
  செங்கம் தளவாநாய்க்கன்பேட்டையில் நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு நகரச் செயலர் சாதிக்பாஷா தலைமை வகித்தார். இதில் செங்கம் தொகுதி எம்எல்ஏ. கிரி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். குப்பனத்தம் கிராமத்தில் ஒன்றியச் செயலர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  போளூர் பகுதியில்...: சேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி ஊராட்சியைச் சேர்ந்த பத்தியாவரம் நியாயவிலைக் கடை, ஆத்துரை, சேதரம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளின் எதிரே திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  பத்தியாவரத்தில் சேத்துப்பட்டு (கிழக்கு) ஒன்றிய திமுக செயலர் சுந்தரம் தலைமையிலும், ஆத்துரையில் ஊராட்சி திமுக செயலர் பெருமாள் தலைமையிலும், சேதரம்பட்டில் ஒன்றிய அவைத் தலைவர் வி.பரசுராமன் தலைமையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஆரணியில்...: ஆரணி, அண்ணா சிலை எதிரே உள்ள வைகை கூட்டுறவு பண்டக சாலை நியாயவிலைக் கடை, பெரியகடை வீதியில் உள்ள நியாயவிலைக் கடை, ஆரணி ராமகிருஷ்ணாபேட்டை நியாயவிலைக் கடை, சைதாப்பேட்டை நியாயவிலைக் கடை ஆகியவற்றின் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, நகரச் செயலர் ஏ.சி.மணி,  வழக்குரைஞர் கே.ஆர்.ராஜன், மாவட்ட பிரதிநிதி ஆர்.தயாளன், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் ஆரணி மாலா, மகளிரணி ஆர்.அம்சா, லலிதா சண்முகசுந்தரம், சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai