சுடச்சுட

  

  வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
  வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வெண்குன்றம் கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 1,500 அடி உயரமுள்ள தவளகிரி மலை உள்ளது. அதன் மீது ஸ்ரீதவளகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது உள்ள இறைவனை வழிபடுவர்.
  இந்த நிலையில் மலையின் முன் பகுதியில் திங்கள்கிழமை காலை திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவெனப் பரவியதில் மலையின் ஒரு பகுதி மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கத்தால்
  தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai