சுடச்சுட

  

  நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து, மாவட்டம் முழுவதும் 1,627 நியாயவிலைக் கடைகள் முன் திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் முறையாக வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட வேங்கிக்கால் நியாயவிலைக் கடை எதிரே வேங்கிக்கால் திமுக கிளை சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட எ.வ.வே.கம்பன் தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். ஊராட்சிக் கழகத் துணைச் செயலர் ஏ.தேவா வரவேற்றார். அவைத் தலைவர் டி.கமல்ராஜ், விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் சி.சண்முகம், ஊராட்சித் துணைச் செயலர் கே.ஏழுமலை, பொருளாளர் பி.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் யுவராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் பி.சீனுவாசன், இளைஞரணி ஆர்.ஞானசேகர், கிளைச் செயலர்கள் எம்.வடிவேல், ஆர்பிரகாஷ், ந.ராமலிங்கம், சேகர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கமிட்டனர். திருவண்ணாமலை நகரில் 40 நியாயவிலைக் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல தண்டராம்பட்டு நியாயவிலைக் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். மாவட்டம் முழுவதும் 1,627 நியாயவிலைக் கடைகள் முன் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai