ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published on : 15th March 2017 07:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.இனியன் தலைமை வகித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும். ஊராட்சிச் செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். உதவிப் பொறியாளர், ஒன்றியப் பொறியாளர்களுக்கு சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் 18 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளனர்.
போளூர்
போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் பிச்சாண்டி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.