சுடச்சுட

  

  திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே, செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  
  ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவர் கே.மணிவர்மா தலைமை வகித்தார். வடக்கு மாவட்டத் தலைவர் கே.ஆர்.தாமோதரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் டி.அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களையும் தங்கு, தடையின்றி வழங்க வேண்டும். விவசாயிகள், மாணவர்கள் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
  மீனவர்கள் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் எழுப்பினர்.  இதில், 100-க்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai