சுடச்சுட

    

    மனைவி தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவரும் சாவு

    By DIN  |   Published on : 15th March 2017 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்தார்.
    வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஐயப்பன் (33). இவரது மனைவி வெண்ணிலா (26). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், ஐயப்பன் தினமும் மது போதையில் வீட்டுக்கு வருவாராம். மேலும், வீட்டுச் செலவுக்கும் பணம் தருவதில்லையாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வேதனையடைந்த வெண்ணிலா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார். அப்போது, ஐயப்பன் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் மாற்றப்பட்டனர்.
    சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெண்ணிலா திங்கள்கிழமையும், ஐயப்பன் செவ்வாய்க்கிழமையும் உயிரிழந்தனர்.
    இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai