சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
    மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மார்ச் மாதத்துக்கான குறைதீர் கூட்டம், வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு, ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகிக்கிறார்.  வேளாண் துறை, விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கின்றனர்.
    எனவே, விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பொதுவான கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்துப் பயன்பெறலாம். கோரிக்கைகளை மனுக்களாகவும் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai