சுடச்சுட

  

  திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டு பேருந்து நிலையத்தில், 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் 11 அம்சக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
  தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்துக்கான வறட்சி நிவாரணத் தொகை ரூ.39,565 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தர வேண்டும். தச்சம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai