சுடச்சுட

    

    வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    வறட்சியால் வேலை இழந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.10 ஆயிரம், 30 கிலோ அரிசி வழங்க வேண்டும், கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஊரக வேலைத் திட்ட பணி நாள்களை 200ஆக உயர்த்த வேண்டும், மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.   
    வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.அரிதாசு தலைமை வகித்தார்.   சங்க நிர்வாகிகள் ந.ராதாகிருஷ்ணன், ஆர்.ராமகிருஷ்ணன், முருகன், முனியன், துரைபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai