சுடச்சுட

  

  திருவண்ணாமலையை அடுத்த மங்கலம்  கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபோர் மன்னலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீபோர் மன்னலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் 185-வது ஆண்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
   முன்னதாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 10) திருவிழா தொடங்கியது. அன்றிரவு 7 மணிக்கு விநாயகர் ஊர்வலம், 8 மணிக்கு பக்தி சொற்பொழிவு, 9 மணிக்கு தெய்வீக நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஸ்ரீபாலமுருகன் புஷ்ப பல்லக்கு ஊர்வலம், 8 மணிக்கு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீபராசக்தி ஊர்வலம், 8 மணிக்கு கரகாட்டம், திங்கள்கிழமை (மார்ச் 13) மாலை 6 மணிக்கு பரிவார தேவதைகள் ஊர்வலம், இரவு 8 மணிக்கு நகைச்சுவைப் பட்டிமன்றம், 10 மணிக்கு சிவன்சக்தி ருத்ரதாண்டவ நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு கரகாட்டம், 12.30 மணிக்கு அருள்வாக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) அதிகாலை ஸ்ரீபோர் மன்னலிங்கேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, தேரோட்டம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மு.அருள்பழனி உள்பட பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai