Enable Javscript for better performance
26 ஆடுகள் மயங்கி விழுந்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே கரும்புத் தோட்டத்தில் தண்ணீர் குடித்த 26 ஆடுகள் மயங்கி விழுந்து இறந்தன.
    திருவண்ணாமலையை அடுத்த சு.வாழவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனி. இவருக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) பழனி தனது நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
    அப்போது, டி.கல்லேரி சாமிதுரை, கந்தசாமி, சமையன் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான 26 ஆடுகளை பழனியின் நிலத்துக்கு அழைத்து வந்து தண்ணீர் குடிக்க வைத்தனர்.
      கரும்புத் தோட்டத்தில் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் 26 ஆடுகளும் மயங்கி விழுந்து இறந்தன. இதுகுறித்து, வெறையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai