சுடச்சுட

    

    பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 680 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.3.76 லட்சம்  வழங்கப்பட்டது.
    சேத்துப்பட்டு அடுத்த செம்மாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியை கலாவதி தலைமை வகித்தார்.  ஆசிரியை வேளாங்கன்னி, ஆசிரியர்கள் கோவிந்தசாமி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   பெரணமல்லூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் பங்கேற்று, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கும் 3ஆம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ரூ.500, ரூ.1000க்கான தொகையை மாணவிகளின் தாயார் அஞ்சலக கணக்கில் வரவு வைத்து அதற்கான புத்தகத்தை வழங்கினார்.
    உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் பேசுகையில், பெரணமல்லூர் ஒன்றியத்தில் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் 607 பேருக்கு ரூ.500 வீதமும், 6ஆம் வகுப்பு பயிலும் 73 மாணவிகளுக்கு ரூ.1000 வீதம் அஞ்சலக கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு பல்வேறு திட்டங்களை கல்விக்காக செயல்படுத்தி வருகிறது.  பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து தரமான கல்வியையும், அரசுத் திட்டங்களையும் பெற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai