Enable Javscript for better performance
அரசு ஊழியர்கள் கோரிக்கை பேரணி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை பேரணி நடத்தினர்.
    திருவண்ணாமலை, திருவள்ளுவர் சிலை எதிரில் இருந்து புறப்பட்ட பேரணியை சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.தங்கராஜ், தலைவர் அ.அருண்பாஷா ஆகியோர் தொடக்கிவைத்தனர். மாநிலப் பொருளாளர் எம்.தங்கராஜ் கோரிக்கைகளை விளக்கி கோஷம் எழுப்பினார்.
    நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, காந்தி நகர் பைபாஸ் மைதானத்தில் நிறைவடைந்தது.   8-வது ஊதியக் குழுவை உடனே அமல்படுத்த வேண்டும்.  மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai