சுடச்சுட

    

    போளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு வட்டாரத் தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். பெரியநகரம் வட்டாரத் தலைவர் ஏழுமலை, நகரத் தலைவர் குப்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
    சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் எம்.வசந்தராஜ் பங்கேற்றுப் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின் பணமதிப்பு நீக்க முடிவால் சாதாரண நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டனர். மேலும், மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை.  மத்திய அரசு தேச நலனில் அக்கரை இல்லாமல் உள்ளது என்றார்.  மாவட்ட பொருளாளர் சி.சத்தியன், ஆரணி முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, சிறப்பு அழைப்பாளர்கள் முனிரத்தினம், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் குமரிமகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai