சுடச்சுட

  

  டிராபிக் ராமசாமியை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலையில் செவ்வாடை பக்தர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   போளூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் புதன்கிழமை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே திரண்டனர். பின்னர், டிராபிக் ராமசாமியை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், பங்காரு அடிகளார், கோயிலுக்குச் செல்லும் பெண் பக்தர்களை டிராபிக் ராமசாமி அவதூறாகப் பேசியுள்ளார். இந்த விடியோவை சமூக வளைதலங்களில் அவர் பரப்பியுள்ளார்.
  இந்த நிகழ்வு செவ்வாடை பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  எனவே, சமூக வலைதளங்களில் பரப்பிய அவதூறு விடியோவை உடனே அகற்ற வேண்டும். டிராபிக் ராமசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து தாலுகா அளவிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று  தெரிவித்தனர்.
  இதையடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் கொடுத்தனர்.
  மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai