சுடச்சுட

  

  தமிழர்களுக்காக உழைக்கும்  ஒரே இயக்கம் திமுகதான்: எ.வ.வேலு

  By DIN  |   Published on : 16th March 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழர்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் திமுக தான் என்று முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பேசினார்.
  திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலுவின் இலவச தையல் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த 500 மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழாவும், இளைஞர் எழுச்சி நாள் விழாவும் புதன்கிழமை நடைபெற்றது.
  திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட  திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயலட்சுமி ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உ.நித்யா, தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, வேலூர் எம்எல்ஏ ப.கார்த்திகேயன், திமுக மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இலவச தையல் பயிற்சிப் பள்ளி முதல்வர் நிர்மலாகுமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தையல் பயிற்சி முடித்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களும், 500 மகளிரணியினருக்கு சீருடைகளையும் வழங்கிப் பேசினார்.
  விழாவில் எ.வ.வேலு பேசுகையில், மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து எழுச்சியாக கொண்டாட வேண்டும். வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டும். இதற்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். இலக்கு இல்லாமல் முன்னேற முடியாது. தமிழர்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் திமுக தான். இதை நீங்கள் எப்போதும் மறக்கக் கூடாது என்றார்.
  விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெகிரி, நகரச் செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, அருணை பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன், மருத்துவர் எ.வ.வே.கம்பன், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழில்சங்கங்களின் மாவட்டத் தலைவர் எ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai