சுடச்சுட

  

  செங்கம் அருகே சொத்துத் தகராறில் தம்பியை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக அண்ணன் கைது செய்யப்பட்டார்.
  செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலையின் மகன்கள் முருகன் (40), நாகப்பன் (36). சொத்து பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
  இந்த நிலையில், புதன்கிழமை காலை  அவர்களது நிலத்தை அளவீடு செய்து அவர்களது பாகத்தை சரிசெய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு, முருகன் அங்கிருந்த கருங்கல்லை எடுத்து தம்பியான நாகப்பன் மீது வீசியுள்ளார்.
  இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நாகப்பன் மயங்கி விழுந்தார் இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது நாகப்பன் உயிரிழந்தது தெரிய வந்தது.
  பின்னர் உடனடியாக மேல்செங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீஸார் விரைந்து வந்து நாகப்பனின் உடலை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், நாகப்பனின் அண்ணன் முருகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai