சுடச்சுட

  

  திமுகவும், அதிமுகவும் தேய்பிறை போலத் தேய்ந்து வருவதாக  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
  பாமக திருவண்ணாமலை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலர் அ.கணேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆ.வேலாயுதம், மாவட்டத் தலைவர்கள் கி.ஏழுமலை, முக்கூர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டச் செயலர் க.சீனுவாசன் வரவேற்றார். பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசியதாவது: திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகளாகும். ஒரு கட்சி 1.67 லட்சம் கோடி ஊழல் செய்தது. மற்றொரு கட்சி தமிழகத்தை ஒட்டுமொத்தமாக சுரண்டியது. இந்த இரு கட்சிகளும் தேய்பிறை போல தேய்ந்து வருகிறது. இந்த இரு கட்சிகளையும் தவிர்த்து தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி பாமகவுக்கு மட்டுமே உண்டு. பாமகவால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியும்.  சேத்பட் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.50 கோடி மோசடி நடைபெற்றது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு நிலுவைப் பணம் வழங்க வேண்டும். மேலும் வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம், ஆரணி வட்டங்களை வறட்சி பாதித்த வட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றார்.
  முன்னாள் எம்.பி. துரை, மாநில தேர்தல் பிரசாரக் குழுச் செயலர் கோ.தன்ராஜ், மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் கோ.எதிரொலிமணியன், மாவட்ட அமைப்புச் செயலர் ஈ.பிச்சைக்கண்ணு, முன்னாள் மாவட்டச் செயலர் மண்ணப்பன், வன்னியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் ப.மச்சேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் பாஞ்சரை பட்டாபிராமன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ர.செல்வம் மற்றும் சென்னாவரம் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலர் ஏ.ஆர்.ராஜாபாஷா நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai