நாட்டுக் கோழி வளர்ப்புப் பயிற்சி
By DIN | Published on : 16th March 2017 09:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 66 விவசாயிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து ஆராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் தியோபிலஸ் ஆனந்த்குமார் பேசுகையில், நாட்டுக்கோழி சேவல்களை வளர்ப்பதால், குறைந்த முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்கலாம்.
வீட்டில் இருப்பவர்கள் கோழி முட்டை, புரதச் சத்து மிக்க இறைச்சி உண்ணலாம்.
முட்டைகள், வளர்ந்த கோழிகளை விற்று லாபம் சம்பாதிக்கலாம். கொட்டகை முறையில் வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் கொடுத்து அதிக எடையுள்ள கோழிகளைப் பெறலாம் என்றார். தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் துரைராஜன், கோழிகளை பாதிக்கும் முக்கிய நோய்கள், தடுக்கும் முறைகள் குறித்துப் பேசினார்.
மேலும், வங்கிகளில் கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கைகள் இந்தப் பயிற்சி மையத்தில் தரப்படும் என்ற தகவலையும் அவர் விளக்கினார்.