சுடச்சுட

  

  பெண்கள் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வரலாம்: டிஎஸ்பி தேவநாதன் பேச்சு

  By DIN  |   Published on : 16th March 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெண்கள் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று திருவண்ணாமலை ஊரகக் காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவநாதன் பேசினார்.
  திருவண்ணாமலையை அடுத்த கீழ்சிறுப்பாக்கம் கிராம ஏரியில் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. இந்த மரங்களை பொதுமக்கள் உதவியுடன் அகற்றும் பணியை திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி தேவநாதன் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
  தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி அவர் பேசுகையில், சீமைக் கருவேல மரங்கள் நம்முடைய குடிநீர், விவசாயத்துக்கான தண்ணீரை உறிஞ்சி விடுகிறது. இது நம்முடைய பூமி. நம்முடைய குடிநீர், விவசாயத்துக்கான தண்ணீர் காணாமல் போவதை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த ஏரியில் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, ஏரியில் மழைநீர் தேங்க வழிவகை செய்ய வேண்டும். இங்கு அதிக அளவில் பெண்கள் இருக்கிறீர்கள். பெண்கள் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டுவரலாம். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இப்படியே தண்ணீர் இல்லை... வீடு இல்லை... சாப்பாடு இல்லை... என்று கோஷம் போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.  நமக்குத் தேவையான அனைத்துக்கும் அரசை நம்பி இருந்தால் ஒரு வேலையும் நடக்காது என்றார். இதைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பொதுமக்கள் உதவியுடன் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளர்கள் உதயசூரியன், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai