சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே பைக் கவிழ்ந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்ஐசி முகவர் உயிரிழந்தார்.

    திருவண்ணாமலையை அடுத்த ஊதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்ஐசி முகவர் சிவக்குமார் (39).  இவர், கடந்த 11-ம் தேதி மங்கலத்தில் இருந்து கானலாபாடி செல்லும் சாலையில் பைக்கில்  சென்றுகொண்டிருந்தார். ஊத்தாங்கல் மாந்தோப்பு அருகே செல்லும்போது, சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாரை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து, மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai