சுடச்சுட

  

  செங்கம் ஒன்றிய, நகர திமுக சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு செங்கத்தில் நடைபெற்றது.
  கூட்டத்துக்கு செங்கம் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் சாதிக்பாஷா வரவேற்றார். செய்தி தொடர்பு இணைச் செயலாளர் சிவ.ஜெயராஜ், செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.
  சிறப்பு அழைப்பாளராக தேர்தல் பணிக் குழுச் செயலர் கம்பம் செல்வேந்திரன் பங்கேற்றுப் பேசினார்.  
  அவர் பேசியதாவது:
  ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ள செயல் தலைவர் பதவி அவரின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன், மற்றக் கட்சியைப் போல் காலையில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மாலையில் கட்சியின் துணை பொதுச் செயலர் பதவி வழங்குவதுபோல் அல்ல, திமுக என்ற கட்சிக்கு பாரம்பரியம் உண்டு, கொள்கைகள் உண்டு. ஸ்டாலின் சின்ன வயது முதலே கட்சியில் ஈடுபாடானவர். அண்ணாவின் பாராட்டுதலுக்கு உரியவர். திருமணமாகி 5-வது மாதத்தில் சிறை சென்று ஓராண்டு சிறையில் இருந்தவர்.
  எனவே, அவரின் அரசியல் வெற்றிக்கு இரவு பகல் பாராமல் பாடுபடவேண்டும் என்றார்.  கூட்டத்தில் செங்கம் ஒன்றிய, நகர, நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், ஊராட்சி கழக செயலர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai