சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் வியாழக்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருவண்ணாமலை, ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் 500-க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வியாழக்கிழமை (மார்ச் 16) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தொடர்ந்து அவர்கள், திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  அப்போது, மத்திய அரசின் அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் அவர்களது பணிக் காலத்துக்குள் 5 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியத்தைத் திருத்தி அமைக்க வேண்டும்.
  7-ஆவது ஊதியக் குழுவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும், உயர்மதிப்பு கொண்ட பண நீக்க நடவடிக்கையின் போது விடுமுறை நாள்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.  இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai