சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் காணாமல் போன உணவக உரிமையாளரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலையை அடுத்த பழைய மல்லவாடி கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் தருமலிங்கம் (33). இவர், திருவண்ணாமலை - வேலூர் சாலை, அரசு ஐடிஐ எதிரே உணவகம் நடத்தி வந்தார்.
    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து அதிகாலை புறப்பட்டு உணவகத்துக்கு வந்தாராம். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லையாம். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
    இதனையடுத்து தருமலிங்கத்தின் தாய் மரகதம், திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
    விசாரணையில், உணவகம் நடத்த வாங்கிய கடனைத் திருப்பித் தரமுடியாததால் அவர் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிய வந்துள்ளதாம். தொடர்ந்து அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai