சுடச்சுட

  

  சேத்துப்பட்டில் உள்ள அனைத்துக் கடைகளிலும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  திருவண்ணாமலை உணவுப் பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வந்த அலுவலர்கள் சேத்துப்பட்டு - செஞ்சி சாலை, ஆரணி சாலை, போளூர் சாலை, வந்தவாசி சாலையில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள், தேநீர் விடுதிகள், பெட்டிக் கடைகள், இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
  அப்போது அவர்கள் சாலையோரத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
  கடைகளில் உள்ள குளிர்பானங்கள், குழந்தைகள் சாப்பிடும் நொறுக்குத் தீனிப் பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை ஆய்வு செய்து, தரமான பொருள்களை விற்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களிடம் கூறினார். தரமற்ற பொருள்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்தனர்.
  அதேபோல இறைச்சிக் கடைகள், தேநீர் விடுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், அங்கு சுத்தம், கழிவுகள் அகற்றம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
  ஆய்வின் போது உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அண்ணாமலை (சேத்துப்பட்டு), ரவி (ஆரணி) ஆகியோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai