சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர், தொடர்ந்து 3-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
    இதனிடையே வியாழக்கிழமை (மார்ச் 16) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அப்போது அவர்கள், தமிழக உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும், ஊராட்சிச் செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உதவிப் பொறியாளர், பொறியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
    சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ச.பாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai