சுடச்சுட

    

    காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சாலைப் பணியாளர் சங்கம் தீர்மானம்

    By DIN  |   Published on : 17th March 2017 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, ஆரணியில் நடைபெற்ற சாலைப் பணியாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் செய்யாறு கோட்ட மாநாடு ஆரணி தனியார் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
    கோட்டத் தலைவர் ஆர்.ஆல்அரசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணை நிர்வாகிகள் எஸ்.பழனி, வி.ஏழுமலை, எஸ்.உதயகுமார், பி.சண்முகம், எம்.குப்புசாமி, வி.அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா சிறப்புரையாற்றினார். துணைப் பொதுச் செயலர் கா.பெருமாள், செயலர் ஆர்.சண்முகம், துணைத் தலைவர் ப.சண்முகசுந்தரம், செயற்குழு உறுப்பினர் ஆர்.ஏழுமலை, முன்னாள் மாநிலப் பொருளாளர் ச.ராஜவேல், திருவண்ணாமலை மாவட்டச் செயலர் எஸ்.சிவக்குமார், வேலூர் மாவட்டச் செயலர் எல்.சிவசங்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
    ஆரணி வட்டத் தலைவர் எஸ்.பஞ்சாட்சரம், வட்டச் செயலர் எஸ்.நந்தகுமார், வட்டப் பொருளாளர் ஜி.நீலகண்டன் ஆகியோர் சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
    கூட்டத்தில், சாலைப் பணியாளர்களுக்கு சம்பளம், இதரப் பணப் பயன்கள் வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்த்திட வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தளவாடப் பொருள்களை வழங்கிட வேண்டும், இறந்த சாலைப் பணியாளர் குடும்பங்களுக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும், 5000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai