குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 17th March 2017 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சதுப்பேரிபாளையம் பகுதி கிராமப் பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி, வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேற்கு ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த சதுப்பேரிபாளையம் கிராமத்தில் சுமார் 2,800 பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2 மாதங்களாகக் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறதாம். இதனால் அந்தப் பகுதி மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர், ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அதிகாரியிடம் இதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கூறியதை அடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.