சுடச்சுட

  

  செங்கம் அருகே உள்ள மேல்ராவந்தவாடி கிராமத்தில் குடிநீர் வழங்கக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  மேல்ராவந்தவாடி கிராமத்தில் ஒரு மாத காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறதாம். இதுகுறித்து அந்தக் கிராமப் பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீருக்காக அப்பகுதி மக்கள், வயல்வெளிகளில் உள்ள கிணறுகளைத் தேடிச் சென்று நீர் எடுத்து வருகின்றனராம். இந்த நிலை தொடர்ந்ததால் பொதுமக்கள் திரண்டு செங்கம் - நீப்பத்துறை சாலையில் காலிக் குடங்களுடன் குடிநீர் வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
  தகவலறிந்து வந்த செங்கம் டி.எஸ்.பி. ஷாஜித்தா, வட்டாட்சியர் உதயகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai