சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேரூராட்சிச் செயல் அலுவலர் எஸ்.மோகன் தொடக்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவ, மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
    நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியபடி சென்ற மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்களை வழங்கியபடி சென்றனர்.
    ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் ஜான்மேரி ஐரின், சித்திரைமதி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் வேல்முருகன், நூலக அலுவலர் பரமேஸ்வரி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் வீரமணி, சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai