தமிழ்ச் சங்க இலக்கியக் கூட்டம்
By DIN | Published on : 17th March 2017 09:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செங்கம் வட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில், இலக்கியக் கூட்டம் அண்மையில் செங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் சங்கர் மாதவன் தலைமை வகித்தார். செங்கம் ஒன்றிய ஆணையாளர் கருணாகரன், தமிழ்ச் சங்கச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, வியாபாரிகள் சங்கத் தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ச் சங்கத் தலைவர் தனஞ்செயன் சிறப்புரையாற்றினார். ஆன்மிகச் சொற்பொழிவாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். "திரையுலக கம்பன் கவியரசர் கண்ணதாசன்' என்ற தலைப்பில் கு.சபரி பேசினார்.
முன்னாள் மேல்புழுதியூர் ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ், சிவசக்தி மழலையர் பள்ளித் தாளாளர் அசோக்குமார், தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, மருத்துவர் வெற்றிக்கனி, தமிழ்ச் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.