சுடச்சுட

  

  போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, தனியாக வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் எனப்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  போளூர் வட்டாட்சியர் அலுவலகம் போளூர், கேளூர், சந்தவாசல், மண்டகொளத்தூர், மொடையூர் என 5பிர்காவை கொண்டதாகும். இதில் 222 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன.
  இந்த அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார் கருவூலம், சார் பதிவாளர் அலுவலகம், ஆதார் புகைப்படம் எடுக்கும் மையம், தேர்தல் அலுவலகம், பொதுமக்கள் இ-சேவை மையம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கிவருகின்றன.
  இங்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த அலுவலக வளாகத்தில் தனியாக வாகன நிறுத்துமிடம் இல்லாததால் வட்டாட்சியர் வாகனம் உள்பட அனைவரின் வாகனங்களும் ஆங்காங்கே ஒழுங்கீனமாக நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
  எனவே, வாகனங்களை நிறுத்த தனியாக இடம் ஒதுக்கி, அங்கு வாகனங்களை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai