சுடச்சுட

    

    செய்யாறு அருகே சரக்கு வாகனத்தில் இருந்து விறகுகள் சரிந்து விழுந்ததில் வியாபாரி உயிரிழந்தார்.
    செய்யாறை அடுத்த ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (40). விறகு வியாபாரம் செய்து வந்த இவர், புதன்கிழமை மாலை விறகுக் கட்டைகளை சரக்கு வாகனத்தில் விற்பனைக்காக ஏற்றிச் சென்று உள்ளார்.
    ஆக்கூர் கிராம ஏரிக்கரை மீது சென்றபோது மேடு பள்ளத்தில் ஏறி இறங்கியதால் வாகனத்தில் இருந்த விறகுகள் சரிந்துள்ளது. இதில், விறகுகள் மீது அமர்ந்து சென்ற தாமோதரன் மீது அவை சரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
    இதுகுறித்து அவரது மகன் திருஞானம் தூசி போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai