சுடச்சுட

    

    செய்யாறு அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 6.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனர்.
    செய்யாறை அடுத்த திரும்பூண்டி கிராமத்தைச் சேரந்தவர் பாண்டுரங்கன் (42). விவசாயியான இவர், கரும்பு வெட்டச் சென்றதாகத் தெரிகிறது. இவரது மனைவி வீட்டைப் பூட்டிக் கொண்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வேலைக்குச் சென்றதாகத் தெரிகிறது.
    வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6.5 பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தெரிய வந்ததாம்.
    இதுகுறித்து அனக்காவூர் போலீஸில், பாண்டுரங்கன் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai