Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.95 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் ரூ.95 லட்சம் ரொக்கம், 252 கிராம் தங்கம், 1,175 கிராம் வெள்ளியை காணிக்கையாக அளித்துள்ளனர்.
    சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. கிரிவல நாள்களில் ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். எனவே, கோயிலில் உள்ள காணிக்கை உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, மார்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதில், ரூ.95 லட்சத்து 17 ஆயிரத்து 297 ரொக்கம், 252 கிராம் தங்கம், 1,175 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.
    ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai