சுடச்சுட

    

    ஆரணியில் முன்னறிவிப்பு இல்லாத மின் நிறுத்தத்தால் வியாபாரிகள் பாதிப்பு: மின் வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு

    By DIN  |   Published on : 18th March 2017 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியில் முன்னறிவிப்பு இல்லாமல் மின் மிறுத்தம் செய்யப்படுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக மின் வாரிய செயற்பொறியாளரிடம் அவர்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
    ஆரணி பகுதியில் மின்வாரியம் சார்பில் தற்போது முன்னறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு முன்பு மாதத்தில் 3-ஆவது அல்லது 4-ஆவது சனிக்கிழமை அன்று பராமரிப்புப் பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும்.
    அதேபோல, இனி வரும் காலங்களில் மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டும் பராமரிப்புப் பணிக்காக அறிவிப்பு செய்து மின் நிறுத்த செய்ய வலியுறுத்தி, ஆரணி வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஆரணி மின்வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai