Enable Javscript for better performance
குடிநீர்த் தட்டுப்பாடு: பாமகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, பாமகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஒருங்கிணைந்த மாவட்ட பாமக சார்பில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.துரை தலைமை வகித்தார். மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் கோ.எதிரொலிமணியன், மாநில துணை பொதுச்செயலர் இரா.காளிதாஸ், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் லோ.சதாசிவம் ஆகியோர் பேசினர்.
    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அண்மைக்காலமாக நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநில துணைத் தலைவர் ச.பாண்டுரங்கன், மாநில மகளிரணி துணைச் செயலர் சே.புஷ்பா, மாவட்டச் செயலர்கள் ப.செந்தில்குமார், சுரேஷ், வேலாயுதம், திருவண்ணாமலை நகரச் செயலர் எஸ்.பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai