சுடச்சுட

  

  திருவண்ணாமலை ஒன்றியத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுக, தேமுதிகவினர் அந்தக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
  திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலர் த.ரமணன் தலைமை வகித்தார். தொமுச மாநிலச் செயலர் க.சவுந்தரராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, மருத்துவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றியம், பாவுப்பட்டு ஊராட்சி ஆர்.சத்தியராஜ் தலைமையில் ஆர்.சக்திவேல், டி.வினோத்குமார், ஆர்.சரண்ராஜ், ஆர்.பாஸ்கர், ஜி.பார்த்தீபன், ஆர்.விக்னேஷ், ஆர்.அரவிந்தன் உள்பட 50-க்கும் மேற்பட்ட அதிமுக, தேமுதிகவினர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
  இவர்களுக்கு தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார். இதில், முன்னாள் ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை அமைப்பாளர் சு.விஜி (எ) விஜியராஜ், ஊராட்சிச் செயலர் பி.சேட்டு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai