சுடச்சுட

  

  பட்டா நிலத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை விவசாயிகள் சொந்தச் செலவில் அகற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 18th March 2017 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தங்கள் சொந்தச் செலவில் அகற்ற வேண்டும் என்று விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி அறிவுறுத்தினார்.
  திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி தலைமை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ம.சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள் உள்பட அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
  கூட்டத்தில் ஆட்சியர் (பொறுப்பு) சா.பழனி பேசியதாவது: மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நிவாரணம் நேரடியாக வரவு வைக்கப்படும்.
  மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். தனி நபர்கள் தங்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தங்கள் சொந்தச் செலவில் அகற்ற வேண்டும்.
  மீண்டும் சீமைக் கருவேல மரங்கள் வளராமல் தடுக்க புன்னை, பூவரசு மரங்களை நட வேண்டும் என்றார். மேலும், மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்குப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சா.பழனி தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai