சுடச்சுட

    

    ஆரணி அருகே பஞ்சாலைத் தொழிலாளர்கள் 3-ஆவது நாளாகப் போராட்டம்

    By DIN  |   Published on : 19th March 2017 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த சேவூர் பி.ஆர்.நகர் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு சனிக்கிழமை 3-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேவூர் பி.ஆர்.நகர் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அவர்களுக்குண்டான தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-ஆவது நாளான சனிக்கிழமை வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதில், வட ஆற்காடு மாவட்ட தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத் தலைவர் ஜி.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். செயலர் வி.யுவராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் டி.ஆறுமுகம், ஏ.ஜெயக்குமார், பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதனிடையே, பஞ்சாலை நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai