Enable Javscript for better performance
குடும்ப வறுமை: பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை குடும்ப வறுமை காரணமாக பெண் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    செய்யாறை அடுத்த தென்னம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி தேவி (34). இந்தத் தம்பதிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
    இந்நிலையில், மாற்றுத் திறனாளியான பச்சையப்பன், பழக்கடையில் கூலி வேலை செய்து வருந்ததால் குறைந்த வருமானமே கிடைத்துள்ளது. இதனால் தேவி குடும்பத்தை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி வந்ததாகத் தெரிகிறது.
    இதனால் மனவேதனையில் இருந்த வந்த தேவி, வியாழக்கிழமை விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் விஷ மருந்தைக் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவி, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் காவல் நிலைய சார்பு - ஆய்வாளர் துரைசாமி வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai