சுடச்சுட

    

    போளூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு பாலத்தின் மீது பைக் மோதியதில் துப்புரவுப் பணியாளர் உயிரிழந்தார்.
    போளூரை அடுத்த திருசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாப்பட்டு மகன் புதூரான் (45). இவர், போளூர் தேர்வுநிலை பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
    புதூரான் பணி முடிந்து வெள்ளிக்கிழமை இரவு திருசூர் கிராமத்துக்கு அல்லிநகர், நடேசன் நகர் வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். நடேசன் நகர் அருகே சென்றபோது, புதூரானின் கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்குள்ள சிறுபாலத்தின் மீது மோதியதாகத் தெரிகிறது.
    இதில் பலத்த காயமடைந்த புதூரான், சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai