சுடச்சுட

  

  ஆரணியை அடுத்த எஸ்.யு.வனம் ஊராட்சி, சின்னபாண்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.
  இதனை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, பக்தர்கள் பலர் வேண்டுதலின்பேரில், முதுகில் அலகு குத்திக்கொண்டு, வாகனங்கள் மூலம் அந்தரத்தில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தனர். மேலும், பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு டிராக்டரை இழுத்துச் சென்றனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai