சுடச்சுட

    

    திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் ரூ. ஒரு கோடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 19th March 2017 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.ஒரு கோடி மதிப்பில் சாலைகள், சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
    திருவண்ணாமலை சகாய நகர், பல்லவன் நகர், கல் நகர் பகுதிகளில் சிமென்ட் சாலைகள், மயானங்களுக்குச் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்குமாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பரிந்துரை செய்தார்.
    இந்தப் பரிந்துரையை ஏற்ற ஆர்.எஸ்.பாரதி, ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கினார். இதையடுத்து, சனிக்கிழமை இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திருவண்ணாமலை முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, முன்னாள் கவுன்சிலர் ப.கார்த்திவேல்மாறன், ஏ.கே.ரத்தினக்குமார், ஆர்.ரஜினிகாந்த், சு.ராஜாங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai