சுடச்சுட

  

  செங்கத்தில் தொழிலதிபர் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை விடிய விடிய வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
  செங்கத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர், செங்கம் துக்காப்பேட்டையில் ஜவுளிக்கடை, பெங்களூர் சாலையில் பெட்ரோல் பங்க், செங்கம் பிரதான சாலையில் மின்சாதன பொருள்கள் விற்பனைக் கடை, இராஜ வீதியில் சூப்பர் மார்க்கெட் என பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும், நிலம் வாங்கி விற்கும் தொழில், சீட்டு பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
  இந்நிலையில், செங்கம் - போளூர் சாலையில் உள்ள பாபுவுக்குச் சொந்தமான மின்சாதன பொருள்கள் விற்பனைக் கடையில் வெள்ளிக்கிழமை இரவு வேலூர் வருமான வரித்துறை அதிகாரி முருகபூபதி உத்தரவின்பேரில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
  அப்போது, அங்கிருந்த கடையின் உரிமையாளர் பாபு மற்றும் அவரது மகன்களின் செல்லிடப்பேசிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததுடன், பாபுவுக்குச் சொந்தமான சொத்து விவரங்களையும், அதற்கான ஆவணங்களை கேட்டறிந்தனராம். இதைத் தொடர்ந்து, அந்தக் கடையில் இருந்த கணினியின் ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றதாகத் தெரிகிறது.
  வருமான வரித் துறையினரின் இந்த திடீர் சோதனையால் செங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai