பள்ளியில் மகளிர் தின விழா
By DIN | Published on : 19th March 2017 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை விக்டோரியா இந்து நடுநிலைப் பள்ளியில் மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலர் மூர்த்தி வரவேற்றார். பின்னர், பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த மகளிர் பற்றிய பேச்சுப் போட்டி நடைபெற்றது.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் பரிசுகள் வழங்கினார். விழாவில் திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், ஓவியர் சோ.நாகராஜன், தொழிலதிபர் ராமச்சந்திர உபாத்தியாயா, கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி தாளாளர் மா.சின்ராஜ், புரவலர் வாசுதேவன், தேசிய நல்லாசிரியர் மூர்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியை லலிதா லட்சுமி, நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்படப் பலர் கலந்துகொண்டனர்.