சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பில், சாதனையாளர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  விழாவுக்கு, கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கல்லூரி இயக்குநர் பொன்.முத்து நினைவுப் பரிசுகள் வழங்கினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உலோக இணைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், அகில இந்திய தொழில்நுட்பக் கழக திட்ட இயக்குநருமான வி.பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார்.
  சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முகேந்திரன், இந்தியன் வெல்டிங் சொசைட்டி தலைவர் பாபு, அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயல் திட்ட அலுவலர் சபரி ஆகியோருக்கு சாதனையாளர் தின நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
  தொடர்ந்து, தேசிய அளவிலான நுண்பொருள் ஆராய்ச்சி மேம்பாடு என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்பு அழைப்பாளர் வி.பாலசுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் ஆண்டுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பொறியாளர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களிடையே இந்திய தொழிற்சாலைகளுக்கு ஆராய்ச்சிக்குத் தேவையான அறிவாற்றலும், திறமையும் குறைவாகவே உள்ளது. எனவே, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
  இதையடுத்து, சிறந்த செயல் திட்டத்துக்கான பரிசு பெற்ற இயந்திரவியல் இறுதியாண்டு மாணவர்கள் அரவிந்தராஜ், கார்த்திக் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், கல்லூரி முதல்வர் டி.தண்டபாணி, துணை முதல்வர் எம்.ரவிச்சந்திரன், பேராசிரியர் பி.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai